வதை Vadhai: A crime love story (Tamil Edition)


Price: ₹ 99.00
(as of Sep 25,2021 17:46:25 UTC – Details)


"வதை" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய நாவல். காதல் குடும்பம் க்ரைம் மூன்று ஜானர்களும் கலந்த இந்த கதை படிப்போர் மனதை வழக்கம் போல் எளிதில் தன்வசப்படுத்தும். படித்து மகிழுங்கள் "வதை"

நாவலிலிருந்து

"நானும் எல்லோரையும் சைட் அடிச்சிப் பார்க்கறேன். நம்ம நேரம் நான் சைட் அடிக்கிற எல்லாப் பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுது."

***

ராமுக்கு பிடிக்காத ஒன்று மௌனம். விடிந்து கம்பெனிக்குச் செல்லும்வரை மௌனம் அவனை விடாது. பிடிவாதமாக மௌனத்தை துரத்த ஏதாவது செய்வான் ஆனாலும் மௌனம் தான் வெல்லும். ஒரு காலத்தில் எவரேனும் சத்தம் போடாமல் இருக்க மாட்டார்களா என்று குடும்பத்தினர் அனைவரையும் கோபமாக பார்த்துக்கொண்டு சுற்றியவன்தான் அவன். அவன் தேடும் போது கிடைக்காத மௌனம் இப்பொழுது அவனைப் பிடித்துக் கொண்டு விடாமல் சித்ரவதை செய்கிறது.

***

மனதில் ரயில் ஓடியது. ராம் எங்கோ ஓடுகிறான். ரயில் துரத்துகிறது. ராம் தப்பித்துக் கொள்வதற்காக வளைந்து நெளிந்து ஓடுகிறான். ரயிலும் அதே மாதிரி வளைந்து நெளிந்து அவனை துரத்துகிறது. ஒரு கட்டத்தில் ராம் ஒன்றும் செய்ய இயலாமல் அப்படியே நின்று கொள்ள வேகமெடுத்த ரயில் அவன் மீது…

***

"எனக்கு ப்ரமோஷன் வேணும்னா"

"வேணும்னா?"

"அவர் கூட ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணனுமாம்"

ஜெயா சொல்ல ராமின் முகம் மாறியது. ஒன்றும் சொல்லாமல் அவள் சொல்வதைக் கவனித்தான்.

"எவ்வளவு படிச்சாலும் எவ்வளவு பெரிய லெவல்க்குப் போனாலும் இந்த பிரச்னைலயிருந்து எங்களால எப்பத்தான் விடுபட முடியும்னு யோசிச்சிட்டிருந்தேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ராம்."

***

"என் தங்கச்சி கிட்ட அசிங்கமா பேசினியாமா?"

"ஆமா அதுக்கென்ன இப்போ?" மைக்கேல் சொல்லி வாய் மூடவில்லை. ராமின் உரமேறிய கைகள் அவன் கன்னத்தைப் பதம் பார்த்தன. மைக்கேல் வாய்க்குள் உப்புக் கரித்தது. ரத்தத்தைத் துப்பினான். உச்சகட்ட கோபத்துடன் ராமை எட்டி உதைக்க முயல சட்டென்று நழுவிக் கொண்ட ராம் அவன் காலைப் பற்றி இழுத்து கீழே விழ வைத்தான். மைக்கேல் சுதாரிக்கும் முன் அவன் வயிற்றில் ஓங்கி மிதித்தான். மைக்கேல் வலி பொறுக்க முடியாமல் அலறினான்.

***

மைக்கேல் தன் கையிலிருந்த பல்பை எடுத்தான்.

அனிதா பயமாய் பார்த்தாள்

"என்னடி? பயமா இருக்கா? இதுக்குள்ள பேட்டரில இருக்கிற சல்ஃப்யூரிக் ஆசிட் ஊத்திருக்கேன்".

***

"கோழிய முதுகில அடிச்சுக் கொல்றது பார்த்திருக்கியா? ஒரு கைல பிடிச்சுத் தூக்கிட்டு இன்னொரு கையால ஒரு கட்டையில முதுகில அடிப்பாங்க. கோழி வலியில் துடிச்சு வாய்ல ரத்தம் வந்து செத்துப் போகும். அத பார்க்கறப்ப நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா இப்ப சந்தோசப்படறேன். எதுக்குத் தெரியுமாடா? உன்ன மாதிரி ஒரு தேர்ட் ரேட்டட் க்ரிமினல்ல அப்படிக் கொல்லப்போறேன்னு."

***
"தெரியும் நல்லாத் தெரியும். அவன் பண்ணது தப்பு தான். ஆனா சார் அவன் செத்துக்கிடந்தப் பார்த்ததும்
அவன் பண்ண தப்பு என் முன்னால வரல. அவன் என் பையன். அதுதான் முன்னாடி வருது. "

ஆரோக்கியராஜ் சொல்ல சந்திரன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

"என்னை மன்னிச்சிடுங்க சந்திரன் சார்"

"எதுக்கு?"

"உங்க குடும்பத்தில இருக்கிற எல்லோரையும் போடச் சொல்லிட்டேன். நான் பண்றது தப்புன்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனா அத செய்யாம இருக்க முடியாது."

***

"சித்தப்பா"

"ம்"

"நாம கையாலாகாதவங்க சித்தப்பா"

"ம்"

"மிடில் க்ளாஸ் வாழ்க்கை இனிமே நமக்கு எப்பவும் வேணாம் சித்தப்பா."

"ம்"

***

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *